கார் மீது டிப்பர் லாரி மோதல
கார் மீது டிப்பர் லாரி மோதல்: 3 பேர் பலி
பெரம்பலூர்: சென்னை ஆவடியை சேர்ந்த 5 பேர் காரில், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு சென்றனர். பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே வந்த போது, வளைவில் திரும்பிய டிப்பர் லாரி கார் மீது மோதியது. சம்பவத்தில், ஜேம்ஸ்ராஜ், அவரது சகோதரர் சவுரிராஜன், சகோதரி சர்மிளா ஆகியோர் பலியானார்கள். ஜேம்ஸ்ராஜ் மனைவி மகாலட்சுமி, சவுரிராஜன் மனைவி ஜூலி ஆகியோர் படுகாயமடைந்தனர். பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment