பொங்கலூர் அருகே சாலையோரத்தில் மண்டை ஓடுகள் குவியல்...!
பொங்கலூர் அருகே சாலையோரத்தில் மண்டை ஓடுகள் குவியல்...!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே சாலையோரத்தில் மூட்டை, மூட்டையாக மனித மண்டை ஓடுகள் குவிந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே காட்டூர் சாலையில் நடந்து சென்ற சிலர் சாலையோரத்தில் கிடந்த 2 சாக்கு மூட்டைகளில் மண்டை ஓடுகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் பல்லடம் வட்டாட்சியர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார், அப்பகுதி மக்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். மண்டை ஓடுகளை இங்கு கொட்டிச் சென்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
மாந்திரீக செயல்களில் ஈடுபடுவதற்காக சுடுகாட்டில் இருந்து மண்டை ஓடுகள் சேகரிக்கப்பட்டு பின்னர் இங்கு கொட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
50க்கும் அதிகமான மண்டை ஓடுகள் சாலையோரத்தில் கிடந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment