Advertisements

Monday, 20 March 2017

கோடை வரும் முன்னே... கொடைக்கானலில் குவியும் மக்கள்...!


கோடை வரும் முன்னே... கொடைக்கானலில் குவியும் மக்கள்...!

கொடைக்கானல்: யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலாப்பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கொடைக்கானலில் குவியத் தொடங்கி உள்ளனர். மோயர் பாயிண்ட், குணா குகை, பசுமைபள்ளத்தாக்கு, கோக்கர்ஸ்வாக், பிரையன்ட் பூங்கா என சுற்றுலா தளங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இதமான சூழலில் தங்கள் குடும்பத்தினருடன் அவர்கள் பொழுதைக் கழிக்கின்றனர். பிளாஸ்டிக் பாட்டில், மதுபானங்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிகளுக்குள் கொண்டு செல்லக்கூடாது என்று வனத்துறை சார்பில் சுற்றுலாப்பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates