Advertisements

Saturday, 11 March 2017

காயத்தால் விலகினார் ஸ்டார்க்

காயத்தால் விலகினார் ஸ்டார்க்


பெங்களூரு : இந்திய அணியுடன் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இருந்து வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஆஸி. அணி பிசியோதெரபி நிபுணர் டேவிட் பீக்லி நேற்று கூறுகையில், ‘பெங்களூரு டெஸ்ட் போட்டியின்போது ஸ்டார்க் வலது காலில் வலி இருப்பதாக தெரிவித்தார். போட்டி முடிந்து சில நாட்களுக்குப் பிறகும் வலி குறையாததால், நேற்று அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, எஞ்சியுள்ள இரண்டு டெஸ்டிலும் ஸ்டார்க் விளையாடமாட்டார். சிகிச்சைக்காக அவர் உடனடியாக நாடு திரும்புகிறார்’ என்றார்.

ஸ்டார்க்குக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அணியில் உள்ள ஜாக்சன் பேர்டுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. நடப்பு தொடரில் காயம் காரணமாக விலகிய 2வது வீரர் ஸ்டார்க் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தோள்பட்டை காயத்தால் விலகியிருந்தார். அவருக்கு பதிலாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் 16ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஸ்டார்க் விலகியுள்ளது ஆஸி அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates