சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக பத்மஜாதேவி நியமனம்: மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக பத்மஜாதேவி நியமனம்: மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு
சென்னை : ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக பத்மஜாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையாளருமான தா.கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. இடைத்தேர்தலுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் இணை இயக்குநரான பத்மஜாதேவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும், தண்டையார்பேட்டை வட்டாட்சியர் என்.சி.சேகர், தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியராக பணிபுரியும் மதன்பிரபு ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை மண்டல அலுவலராக பணிபுரியும் கே.பி.விஜயகுமார் வாக்காளர் பதிவு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment