Advertisements

Thursday, 16 March 2017

விஜய் ஹசாரே: பைனலில் தமிழகம்


விஜய் ஹசாரே: பைனலில் தமிழகம்

புதுடில்லி: விஜய் ஹசாரே டிராபி பைனலுக்கு தமிழக அணி முன்னேறியது. அரையிறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பரோடா அணியை வீழ்த்தியது.
டில்லியில் நடந்த விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) அரையிறுதியில் தமிழகம், பரோடா அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்டிங்' செய்த பரோடா அணிக்கு கேதர் தேவ்தார் (46), ஆதித்யா வாக்மோடு (45) நல்ல துவக்கம் தந்தனர். தீபக் ஹூடா (0), யூசுப் பதான் (4) ஏமாற்றினர். குர்னல் பாண்ட்யா (30), கேப்டன் இர்பான் பதான் (27), பினல் ஷா (36) ஓரளவு கைகொடுத்தனர்.
பரோடா அணி, 49.3 ஓவரில் 219 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் சாய் கிஷோர் 4 விக்கெட் கைப்பற்றினார்.
சுலப இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு கவுசிக் காந்தி (19), கங்கா ஸ்ரீதர் ராஜு (15) சுமாரான துவக்கம் தந்தனர். பாபா அபராஜித் (28) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய தினேஷ் கார்த்திக் (77) அரைசதம் கடந்தார். மறுமனையில் அசத்திய கேப்டன் விஜய் சங்கர், தன்பங்கிற்கு அரைசதமடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
தமிழக அணி, 47.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விஜய் சங்கர் (53), வாஷிங்டன் சுந்தர் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates