Advertisements

Thursday, 16 March 2017

நிக்கோலஸ் சதம்: மீண்டது நியூசி.,

நிக்கோலஸ் சதம்: மீண்டது நியூசி.,

வெலிங்டன்: இரண்டாவது டெஸ்டில் நிக்கோலஸ் சதம் அடித்து கைகொடுக்க சரிவிலிருந்து மீண்ட நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 268 ரன்கள் எடுத்தது. 'சுழலில்' அசத்திய தென் ஆப்ரிக்காவின் டுமினி 4 விக்கெட் வீழ்த்தினார்.
நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் நேற்று வெலிங்டனில் துவங்கியது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி 'பவுலிங்' தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணிக்கு துவக்கமே ஏமாற்றமாக அமைந்தது. டாம் லதாம் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரபாடா 'வேகத்தில்' கேப்டன் வில்லியம்சன் (2), நெயில் புரூம் (0) அவுட்டாகினர். மகாராஜ் 'சுழலில்' ஜீத் ராவல் (36), நீஷம் (15) சிக்க, நியூசிலாந்து அணி 101 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
நிக்கோலஸ் அபாரம்: பின் இணைந்த நிக்கோலஸ், வாட்லிங் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. நிக்கோலஸ் (118) முதல் டெஸ்ட் சதம் அடித்தார். இவரை டுமினி அவுட்டாக்கினார். தொடர்ந்து அசத்திய இவர், கிராண்ட்ஹோம் (4), வாட்லிங் (34), வாக்னரை (2) வெ ளியேற்றினார்.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக டுமினி 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின், முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணியின் ஸ்டீபன் குக் (3), எல்கர் (9) ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து, 244 ரன்கள் பின்தங்கி இருந்தது. 'நைட் வாட்ச்மேன்' ரபாடா (8), ஆம்லா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates