சிவ நடிகருக்கு குழி தோண்டும் தயாரிப்பாளர் நண்பர்!
சிவ நடிகருக்கு குழி தோண்டும் தயாரிப்பாளர் நண்பர்!
தொலைகாட்சி மூலம் தமிழ் சினமா ரசிகர்களிடம் பிரபலமடைந்து இன்று அஜீத், விஜய், சூர்யாவுக்கு பின்னர் வர்தகத்தில் உச்சம் தொட்டுள்ள நடிகர் அவர். தற்போது தனது நெருங்கிய நண்பரான அரச தயாரிப்பாளர் படத்தில் மட்டுமே நடிப்பது என முடிவெடுத்துள்ளவர், தற்போது அதே தயாரிப்பாளரின் பெயரை கொண்ட இயக்குனரின் படத்தின் படப்பிடிப்பில் தளத்தில் நடக்கும் கூத்துக்களால் தான் இப்படி கூறுகின்றனர் கோடம்பாக்கத்தினர்.தற்போது சிவ நடிகர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு குப்பம் போன்ற அரங்கம் அமைக்கப்பட்டு அதில் நடைபெற்று வருகிறது. இங்கு தான் தயாரிப்பாளர் ஜிம் பாய்ஸ் என கூறப்படும் அடியாட்களை வைத்து அட்ராசிட்டி செய்து வருகிறாராம்.
நடிகரிடம் யாரையும் நெருங்க விடாமல் காத்து வருகிறாராம். இப்படியெல்லாம் செய்து நடிகரை குளிர்வித்து அடுத்தடுத்த படங்களையும் தானே தயாரிக்க வேண்டி இதையெல்லாம் செய்கிறாராம். ஆனால் இதை பார்த்த சினிமாவாசிகளோ இதை போன்ற செயல் மூலம் மறைமுகமாக அந்த நடிகருக்கு தயாரிப்பாளரே குழி தோண்டுகிறார் என கிசு கிசுக்கின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை நடிகர் தடுத்தால் மட்டுமே அவர் பெயருக்கு களங்கள் ஏற்படாது என கூறுகின்றனர்.
அவர் இதை கவனிப்பாரா?
0 comments:
Post a Comment