புதிய படங்களின் போலி டிவிடிக்கள் விற்றவர் கைது
புதிய படங்களின் போலி டிவிடிக்கள் விற்றவர் கைது
சென்னை: புதிதாக வெளிவந்த திரைப்படங்களின் டிவிடிக்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன்பேரில், போலி டிவிடிக்கள் தயாரித்து விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி போலி டிவிடிக்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பர்மா பஜார் மற்றும் ரத்தன் பஜார் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பர்மா பஜார், ராஜாஜி சாலையில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி அருகே ஒருவர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில், புதிய தமிழ் திரைப்படங்களின் போலி டிவிடிக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆலந்தூர் ஜின்னா லேன் பகுதியை சேர்ந்த சிராஜூதீன் (26) என்று தெரியவந்தது. இவர் ஆலந்தூர் பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து அங்கு உயர் ரக ரைட்டிங் மெஷின்கள் மூலம், உரிமம் பெறாத புதிய திரைப்படங்கள், ஆங்கில படங்களை போலியாக தயாரித்து பர்மா பஜார் மற்றும் ரத்தன் பஜார் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிராஜூதீனை போலீசார் கைது ெசய்தனர். அவர் வீட்டில் சோதனை செய்து அங்கிருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 2 உயர் ரக ரைட்டிங் மெஷின்கள், 18,200 புதிய திரைப்படங்களின் டிவிடிக்களை பறிமுதல் செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment