Advertisements

Monday, 20 March 2017

கஞ்சா கடத்திய மாநகர பஸ் டிரைவர் கைது

கஞ்சா கடத்திய மாநகர பஸ் டிரைவர் கைது

வியாசர்பாடி: பெரம்பூர் பிபி சாலையில் செம்பியம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் ஸ்கூட்டரில் வந்த ஒருவரை மடக்கினர். சோதனையில் சீட்டுக்கு அடியில் சுமார் 2 கிலோ கஞ்சா இருந்தது. இதை பறிமுதல் செய்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், பிடிபட்டவர் கணேசன் (56), வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 15வது குறுக்கு தெருவில் வசித்து வருவதும், மாநகர போக்குவரத்துக் கழக பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரிந்தது.

மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து, தனியாக ஆட்களை நியமித்து வியாசர்பாடி, பெரம்பூர், புளியந்தோப்பு, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மாநகர பஸ் டிரைவர் ஒருவர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், இவருக்கு யார் யார் உடந்தையாக உள்ளனர் என போலீசார் விசாரிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates