Advertisements

Saturday, 18 March 2017

பிரதமரின் சமூக ஊடக கணக்கு பராமரிப்புக்கு செலவே இல்லை

பிரதமரின் சமூக ஊடக கணக்கு பராமரிப்புக்கு செலவே இல்லை

புதுடில்லி: 'பிரதமர் மோடியின் சமூக ஊடக கணக்குகளின் பராமரிப்புக்கு எந்த செலவும் செய்யப்படவில்லை' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரும், டில்லி துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிரதமர் மோடியின் சமூக ஊடக கணக்குகளை பராமரிக்க செலவிடப்படும் தொகை குறித்து கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதில்: கடந்த 2014, மே மாதம், பிரதமர் மோடியின் பெயரில் துவங்கப்பட்ட, 'பேஸ்புக், டுவிட்டர், யு டியூப்' போன்றவற்றில், சமூக ஊடக பிரசாரம் எதுவும் செய்யப்படவில்லை.
இந்த கணக்குகள் துவங்கப்பட்டதில் இருந்து இதுவரை, அவற்றின் பராமரிப்புக்காக, ஒரு ரூபாய் கூட செலவிடப்படவில்லை. இந்த கணக்குகளை பிரதமர் அலுவலகம் பராமரித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates