அந்தரத்தில் அசத்திய இளம்பெண்!! ஏரியல் யோகாவில் சாதனை....
அந்தரத்தில் அசத்திய இளம்பெண்!! ஏரியல் யோகாவில் சாதனை....
ராஜபாளையம்: ஏரியல் என்னும் புதுவகை யோகாவை ஒரு மணி நேரம் 10 நிமிடங்களில் 178 வகையான கலைகளை செய்து ராஜபாளையத்தை சேர்ந்த அஸ்வினி என்கிற 25 வயது பொறியியல் பட்டதாரி பெண் அசத்தியுள்ளார். 18 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட பருத்தி துணியை தொட்டில் போல் கட்டி அதில் அமர்ந்து உடலை வளைத்து, நெளித்து இடைவிடாது செய்து அசத்தினார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக ஏரியல் யோகாவில் 178 கலைகளை ஒரு மணி நேரம் 10 நிமிடங்களில் செய்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்தார். அடுத்தப்படியாக உலக அளவில் சாதிப்பதே தனது லட்சியம் என்று அவர் தெரிவித்தார். அஸ்வினியை பெற்றோர் உள்பட அவரது சாதனையை கண்டு வியந்த எல்லோரும் பாராட்டினர்.
தொட்டில் கட்டி அதில் அமர்ந்து செய்யும் இந்த ஏரியல் யோகா ஆஸ்திரேலியாவில் பிரபலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment