சமூகப்பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் பணி... விண்ணப்பிக்கலாம்
சமூகப்பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் பணி... விண்ணப்பிக்கலாம்
திருச்சி: சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள குரூப் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள குருப் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். முன்னாள் இராணுவத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பைச் சார்ந்த முன்னுரிமை பெற்ற சமூகப்பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களில் கல்வி பயின்ற மற்றும் பயின்று வரும் மாணவ-மாணவிகளை கொண்டு நிரப்பப்பட உள்ளது.
தகுதியானவர்கள் அதற்கான படிவத்தினை மாவட்ட இணைதள முகவரியான www.tiruchirappalli.nic.in அல்லது www.socialdefence.tn.gov.in என்ற இணைதளத்தில் பதிவிறக்கம் செய்து கல்வி மற்றும் இதர சான்றின் ஒளிநகலுடன் வரும் 25ம் தேதிக்குள் இயக்குநர் அலுவலகம், சமூகப்பாதுகாப்புத் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், அபிராமி தியேட்டர் அருகில், சென்னை-600010 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்கள் தேவைப்படின் அலுவலக வேலை நாட்களில் 044-26426421, 044-26427022 மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு-0431-2421055 என்ற எண்களில் தொடர்புக் கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment