கோவா: இரண்டாம் இடம் பிடித்த பா.ஜ., ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது.
கோவா: இரண்டாம் இடம் பிடித்த பா.ஜ., ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது.
பனாஜி: கோவா தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்த பா.ஜ., ஆட்சியமைக்க உரிமை கோருகிறது.
நடந்து முடிந்த கோவா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 21 இடங்களை பிடித்தால் பெரும்பான்மை என்ற நிலையில் காங்., 17 தொகுதிகளையும், பா.ஜ., 13 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 10 தொகுதிகளையும் கைபற்றியது. இதனால் எந்தகட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனது. முன்னதாக பா.ஜ., ஆட்சியில் இருந்த கோவாவின் முதல்வராக இருந்த லஷ்மிகாந்த பர்சேகர் தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இதனால் எந்த கட்சி ஆட்சியை கைப்பற்ற போகிறது என்ற கேள்வி எழுந்தது.
அதிக ஓட்டுகள்
தேர்தலில் பா.ஜ., விட அதிக காங்., அதிக எம்.எல்.ஏ.,க்களை பெற்றிருந்தாலும் ஓட்டு சதவீதத்தை பார்க்கும் போது பா.ஜ., 32.5 சதவீத ஓட்டுக்களையும், காங்., 28.3 சதவீத ஓட்டுக்களையும் பெற்றிருக்கிறது. காங்., விட பா.ஜ., அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும் குறைவான எம்.எல்.ஏ.க்களை யே பெற்றது.
ஆட்சி அமைக்க உரிமை
இந்நிலையில் கோவாவில் எம்.ஜி.பி., கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 எம்.எல்.ஏ.க்கள், கோவா பார்வேர்டு கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 3 சுயேட்சை எம்.எல்.ஏ,.க்கள் ஆகியோர் பா.ஜ., விற்கு ஆதரவை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது . இதனால் 22 எம்.எல்.ஏ.க்களை பெற்று மனோர் பாரிக்கரை முதல்வராக கொண்டு ஆட்சியமைக்க உரிமை கோருகிறது பா.ஜ., கட்சி. வெறும் 13 இடங்களையே பிடித்து இரண்டாம் இடம் பிடித்த பா.ஜ., ஆட்சியமைக்க உரிமை கோருவது அம்மாநில மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment