Advertisements

Sunday, 12 March 2017

புதிய இந்தியா வளர்ச்சி; மோடியின் முக்கிய 10 தகவல்கள்

புதிய இந்தியா வளர்ச்சி; மோடியின் முக்கிய 10 தகவல்கள்

புதுடில்லி: புதிய இந்தியா வளர்ச்சி இனி இளைஞர்களின் கனவாக அமைய வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.
உ.பி., தேர்தலில் பா.ஜ., கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து நன்றி செலுத்தும் நிகழ்ச்சி டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி புதிய இந்தியா வளர்ச்சி குறித்து பேசிய 10 முக்கிய தகவல்கள்:

1. புதிய இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. (பேச்சின் நடுவே 20 முறை புதிய இந்தியா குறித்து குறிப்பிட்டார்)

2.2022 ம் ஆண்டில் புதிய இந்தியா முழுமையடையும் , 75வது சுதந்திர தினத்தில் இந்தியா புதிய விடுதலையை பெறும்

3. புதிய இந்தியா இனி இளைஞர்களின் கனவாக அமைய வேண்டும்.

4. புதிய இந்தியாவில் பெண்களின் கனவுகள் நிறைவேறியிருக்கும்.

5. எங்களது செயல்களில் தெரியாமல் தவறுகள் நடக்கலாம், எண்ணம் தவறாக இல்லை

6. புதிய இந்தியாவிற்கு ஏழைகளின் வளர்ச்சியே முக்கியமாக அமைகிறது.

7. ஏழைகள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையே பயன்படுத்துகின்றனர். சலுகைளை அல்ல

8. இந்த அரசு மக்களிடம் தாழ்மையாகவே நடந்து கொள்ளும், அதிகாரம் என்பது பதவியில் அல்ல

9. எழைகளின் பலத்தை என்னால் கண்டறிய முடிகிறது. அவர்களின் வளர்ச்சி நாட்டை பெரிதும் பலப்படுத்தும்.

10. ஏழைகள் வளர்ச்சியடைந்தால், நடுத்தர மக்களின் பாரம் தானாக காணாமல் போகும்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates