கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூத்தடித்த வீடியோ
கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூத்தடித்த வீடியோ
Watch video link
சென்னை: கூவத்தூர் உல்லாச விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடித்த கூத்துகள் இன்னமும் மக்கள் மனதை விட்டு அகன்றுவிடவில்லை. தற்போது கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆடிய ஆட்டம் என ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதிமுகவை கைப்பற்றிய சசிகலா ஆட்சியை கபளீகரம் செய்ய 122 அதிமுக எம்.எல்.ஏக்களை கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் உல்லாச விடுதியில் அடைத்து வைத்தார். மக்கள் பிரதிநிதிகளான நாம் சிறை வைக்கப்பட்டிருக்கிறோமே என்கிற சுரணையே இல்லாமல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூத்தடித்து கும்மாளம் போட்டிருக்கின்றனர்.
இதில் மட்டன் கொடுத்து காலையிலேயே மட்டையாக்கிவிடுகிறார்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்து மகிழ்ந்தனர் அதிமுக எம்.எல்.ஏக்கள். குடியும் கூத்துமாக ஒரு வார காலம் கூவத்தூரிலேயே குடியிருந்தனர் இந்த எம்.எல்.ஏக்கள்.
இந்த கூத்துகளில் ஒன்று என தலைப்பிட்டு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.. நன்றாக பாருங்கள்... உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.வாகவும் இருக்கலாம்.
வீடியோ:
0 comments:
Post a Comment