Advertisements

Thursday, 9 March 2017

உலகின் தலைசிறந்த வீரராக விராட் கோலி


உலகின் தலைசிறந்த வீரராக  விராட் கோலி






உலகின் தலைசிறந்த வீரராக இருக்க வேண்டும் என்று எப்போதும் விரும்பினேன் என விராட் கோலி தெரிவித்துள்ளர்.

பெங்களூரு,

ஆரம்பம் முதலே நான் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ வேண்டும் என்று விரும்பி வந்தேன் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ யின் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்த விழாவில்  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது. விழாவில் பேசிய விராட் கோலி கூறியதாவது:- உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ வேண்டும் என்று நான் எப்போதும் விருப்பப்பட்டேன். எனவே, மூன்று வித கிரிக்கெட்டிகளிலும் நல்ல பாஃர்மில் நீடிப்பதற்கு எதுவேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன். 

மூன்று வடிவ போட்டிகளுக்கு தகுந்தாற்போல் மாறிக்கொள்வதும், அணியை முன்னெடுத்து செல்வதும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எனது கரீயர் முழுவதும்  நான் எடுத்துச்சென்ற விளையாட்டை சந்தேகிக்கும் பல நபர்கள் இருந்தனர். தற்போதும் கூட சந்தேகிப்பவர்களும் வெறுப்பாளர்களும் உள்ளனர். ஆனால், நான் என்னை முழுவதுமாக நம்புகிறேன் என்பதே உறுதி. நான் எப்போதும் எனது உள்ளத்தை நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் எனது வாழ்க்கையில் 120 சதவீத பங்களிப்பை என்னால் அளிக்க முடிந்தால்  நான் யாருக்கும் பதிலளிக்க தேவையில்ல்லை”இவ்வாறு அவர் பேசினார். மூன்றாவது முறையாக பாலி உமரிகர் விருதை பெறும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.








                                                                                                                             

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates