வெள்ளை மாளிகைக்கு குண்டு மிரட்டல்... மர்ம நபர் கைது..!!
வெள்ளை மாளிகைக்கு குண்டு மிரட்டல்... மர்ம நபர் கைது..!!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சனிக்கிழமை இரவு 11.05 மணியவில், வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு செல்லும் வழியில் உள்ள செக் போஸ்ட்டிற்கு காரில் வந்த நபர் ஒருவர் தனது காரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தார்.
அவ்வளவுதான் பரபரப்பு பற்றிக் கொண்டது. தொடர்ந்து செக்போஸ்ட் மூடப்பட்டது. உடனடியாக அந்த நபரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கார் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது.
வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிரமாக சோதனை செய்தனர். காரில் வெடிகுண்டு இருந்ததா இல்லையா என்பது பற்றி உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும் வெள்ளை மாளிகைக்கு குண்டு வைக்க அந்த மர்ம நபர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒருசாரார் அந்த நபர் மனநிலை பாதித்தவராக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Post a Comment