கப்பலில் கடத்த முயன்ற ரூ.15கோடி செம்மரம் சிக்கியது
கப்பலில் கடத்த முயன்ற ரூ.15கோடி செம்மரம் சிக்கியது
சென்னை: பிவிசி பைப் என்று குறிப்பிட்டு போலி ஆவணம் கொண்டு, கன்டெய்னர் மூலம் சீனாவுக்கு கடத்த முயன்ற 11 டன் செம்மரக்கட்டைகளை அதிகாரிகள், கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா. மாதவரம் மேம்பாலம் அருகே கன்டெய்னர் யார்டு உள்ளது. இங்கு சென்னை துறைமுகத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படும் கன்டெய்னர்கள் பாதுகாக்கப்பட்டு, சோதனை முடிந்தபின், அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில், நேற்று சீனாவுக்கு அனுப்புவதற்காக ஒரு கன்டெய்னர் வந்து இருந்தது. அதன் ஆவணங்களை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அதனை திறந்து சோதனை செய்ததில் ஏராளமான செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 11 டன் இருந்தது இதன் மதிப்பு 15கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த கன்டெய்னர் அனுப்பிய நிறுவனம் குறித்து விசாரித்தபோது, பிவிசி பைப் என குறிப்பிட்டு, தனியார் ஒருவர் பெயரில் 5 கன்டெய்னர்கள் சீனாவுக்கு அனுப்ப முயன்றது தெரியவந்தது. ஒரு கன்டெய்னர் அதிகாரிகளிடம் சிக்கியது. மற்ற 4 கன்டெய்னர்கள் எங்கு உள்ளது என அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment