பிரான்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் காயம்
பிரான்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் காயம்
பாரிஸ்: பிரான்சில் பள்ளி ஒன்றில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. பயங்கரவாதிகள் தாக்குதலாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரான்சின் தெற்கு மாகாணமான கிராஸி என்ற பகுதியில் பள்ளி ஒன்றில் இன்று மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 பேர் காயமடைந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவன் சிக்கியதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியக அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டதால், பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என பிரான்ஸ் அரசு தெரிவித்ததையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment