Advertisements

Monday, 20 March 2017

AAA' படத்தின் ரகசியத்தை உடைத்த சிம்பு!


'AAA' படத்தின் ரகசியத்தை உடைத்த சிம்பு!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கம் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது அனைவருக்கு தெரியும். தற்போது நான்காவதாக ஒரு கெட்டப்பிலும் இதில சிம்பு நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிம்புவே கூறியுள்ளார்.
சிம்பு படத்தை பற்றி கூறும்போது, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஒரு வித்தியாசமான படம். நாங்கள் புதிதாக ஒரு முயற்சி எடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படத்தில் மூன்று மெயின் கதாபாத்திரங்கள் வருவதால் படத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து வைத்தோம்.
ஆனால் இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களை தாண்டி நான்காவது கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இதை நான் வெளியிட்டதற்கு ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடம் கோபம் கொள்வார் என்று நினைக்கிறேன். இருந்தாலும், இதை வெளியிட இதுதான் சரியான நேரம். படத்தில் நான்காவது கதாபாத்திரம் உங்களுக்கு கண்டிப்பாக சர்ப்ரைஸாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்கும். என்று நம்புகிறேன் என்று சிம்பு கூறினார்.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates