Advertisements

Monday, 20 March 2017

சிறந்த திரில்லர் படம் இது.... டுவிட் போட்ட நடிகர் சிவகார்த்திகேயன்..!!

சிறந்த திரில்லர் படம் இது.... டுவிட் போட்ட நடிகர் சிவகார்த்திகேயன்..!!

சென்னை: தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான். படக்குழுவுக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்று டுவிட் போட்டு மாநகரம் படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

புதுமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பநீ, ரெஜினா, சுதீப் ஆகியோர் நடித்த படம் மாநகரம். இந்த படம் ரிலீஸ் ஆனதில் இருந்தே ரசிகர்களின் அமோக வரவேற்பில் திக்குமுக்காடி வருகிறது. பல திரையரங்குகளில் வெற்றிகரமாக வசூலை அள்ளுகிறது.

இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான், படக்குழுவுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

எனக்கு பிடித்த நடிகரான முனிஸ்காந்த் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார் என பாராட்டியுள்ளார். இது படக்குழுவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates