திருவண்ணாமலைக்கு வந்த நடிகை கவுதமி... கிரி வலம் சென்றார்
திருவண்ணாமலைக்கு வந்த நடிகை கவுதமி... கிரி வலம் சென்றார்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயிலில் நடிகை கவுதமி திடீர் என்று சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் வந்தார்.
நடிகை கவுதமி நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு சென்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்பாள் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் நவக்கிரகங்களை சுற்றி வந்து நெய் விளக்கேற்றி வழிபட்டார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அவர் கூறுகையில், வெகு நாட்களாக ''அண்ணாமலையார் சன்னதிக்கு வர வேண்டும் என்று நினைத்து இருந்தேன். தற்போது தான் அதற்கான கால சூழ்நிலை அமைந்தது'' என்றார்.
பின்னர் அவர் அவங்கிருந்து புறப்பட்டு காரில் கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமங்களுக்கு சென்று வழிபட்டார்.
தொடர்ந்து கிரிவலம் சென்றார்.
0 comments:
Post a Comment