பிற விளையாட்டுகள் குத்துச்சண்டை: இந்தியா விலகல்
பிற விளையாட்டுகள்
குத்துச்சண்டை: இந்தியா விலகல்
புதுடில்லி: ஜெர்மனியில், 44வது கெமிஸ்டிரி கோப்பை சர்வதேச குத்துச்சண்டை போட்டி இன்று துவங்குகிறது. இதற்காக அன்குஷ் தகியா (60 கி.கி.,), ரியால் புரி (81 கி.கி.,) உள்ளிட்டோர் அடங்கிய 10 பேர் கொண்ட இந்திய அணி, நேற்று ஜெர்மனி செல்ல இருந்தது. ஆனால் இவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் 'விசா' கிடைக்காததால், இப்போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (பி.எப்.ஐ.,) தலைவர் அஜய் சிங் கூறுகையில், ''விசா கிடைக்காததால், ஜெர்மனியில் நடக்கவுள்ள குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்க முடியவில்லை. ஜெர்மனி செல்வதற்கான 'விசா' பெற, வீரர்களின் சொந்த மாவட்டத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால், டில்லியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்ததால், நிராகரிக்கப்பட்டது. இவர்கள் வேறு ஒரு தொடரில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.
0 comments:
Post a Comment