இத செலக்ட் செய்யுங்கள்!! புரோட்ரூலி டார்லிங் மாடல் ஸ்மார்ட்போனில் வைரம் இருக்கிறது!!!
இத செலக்ட் செய்யுங்கள்!! புரோட்ரூலி டார்லிங் மாடல் ஸ்மார்ட்போனில் வைரம் இருக்கிறது!!!
தற்போதைய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க புதுப்புது ஐடியாக்களின் உதவியால் தயார் செய்து வரும் ஸ்மார்ட்போன்களால் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான ஸ்மார்ட்போன்கள் கிடைத்து வருகிறது.
முன்னணி நிறுவனங்களான சியாமி மி நிறுவனம் தங்களது ஸ்மார்ட்போன்களை செராமிக் மெட்டல்களிலும், எல்ஜி நிறுவனம் தனது G5 மாடலுக்காக வித்தியாசமான மாடுலர் டிசைனிலும் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகின்றன. ஆனால் இந்த மாடல்களில் பெரும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.
இந்த நிலையில் சீனாவின் இன்னொரு ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான புரோட்ரூலி (ProTruly) ஒரு வித்தியாசமான மாடல் ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
புரோட்ரூலி டார்லிங் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த புதிய டிசைன் உலகின் முதல் 360 டிகிரி பின் கேமிரா வசதியுடன் உள்ள போன் ஆகும்.
மேலும் இந்த போனின் கேமிரா அருகே சில வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் உலகின் முதல் VR வகை ஸ்மார்ட்போன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போனில் கிடைக்கும் நான்கு வைரங்கள்:
இந்த புரோட்ரூலி டார்லிங் மாடல் ஸ்மார்ட்போனின் ஹைலைட் என்னவெனில் பின்பக்க கேமிரா அருகில் நான்கு வைரங்கள் லெதர் க்ரிப்பில் பதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு விதங்களில் வெளிவரும் டார்லிங் போன்:
இந்த புரோட்ரூலி டார்லிங் மாடல் ஸ்மார்ட்போனில் இரண்டு விதங்களில் வெளியாகவுள்ளது. முதல் மாடலான ஸ்டாண்டர்ட் மாடல் ரூ.40000 விலையில் கிடைக்கும்,. இரண்டாவது மாடலான ஹை எண்ட் மாடல் ரூ.87000 விலையில் கிடைக்கும்.
இரண்டு மாடல்களிலும் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருந்தாலும் முதல் மாடலில் மேனுவல் ஹோம் பட்டனிலும், இரண்டாவது மாடலில் பின்பக்கம் உள்ள கேமிரா அருகிலும் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. மேலும் இந்த போனில் உள்ள தெர்மல் சென்சார் மனிதனின் உடல் வெப்பத்தை அறிய உதவும்
சிறப்பு அம்சங்கள்?
மேலும் இந்த புரோட்ரூலி டார்லிங் மாடல் ஸ்மார்ட்போனில் உள்ள ஹார்ட்வேர் பொருட்களை பார்த்தால், இந்த போன் 5.5 இன்ச் FHD 1080P அமோ எல்.இ.டி டிஸ்ப்ளேவை கொண்டது. அதுமட்டுமின்றி மெடியாடெக் ஹீலியோ X20 டெக்காகோர் SoC வகையை கொண்டது.
4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் மெமரியை கொண்ட இந்த போனில் ஆண்ட்ராய்ட் 6.0 ஓஎஸ் உள்ளது. மேலும் இந்த போனின் பேட்டரி 3560 mAh திறனில் உள்ளது
எங்கு கிடைக்கும்?
இப்போதைக்கு இந்த போன் சீனாவில் மட்டுமே கிடைக்கும். சீனாவை தாண்டி வெளிநாடுகளில் இந்த போன் வரும் நவம்பர் முதல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment