Advertisements

Friday, 17 March 2017

திரை துறையை காப்பற்றவே தேர்தலில் போட்டி - விஷால்

திரை துறையை காப்பற்றவே தேர்தலில் போட்டி - விஷால்

சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் கோவை, திருப்பூர் மாவட்டங் களைச் சேர்ந்த தயாரிப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவருடன் மிஷ்கின், எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, நடிகர்கள் உதயா, நந்தா ஆகி யோரும் சென்றுள்ளனர்.கோவையில் செய்தியாளர்களை சந்தித்த விஷால் திரைத் துறையை காப்பாற்று வதற்காகவே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடு கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக எதுவுமே நடக்கவில்லை. எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணப் படவில்லை. சினிமாவில் தயாரிப்புத் துறை என்பது மிகவும் முக்கியமானது. இத்துறையைச் சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த நிலையை மாற்றவே நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்.கோவை, திருப்பூர் மாவட்ட தயாரிப்பாளர்களைச் சந்தித்து, நாங்கள் எதற்காக இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என்பதை விளக்குவதற்காக கோவை வந்துள்ளோம்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடர்பாக நடிகர் கமலை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். அவர் எங்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். ஜனநாயக முறையில் துணிச்சலான கருத்துகளை கூறி வருகிறார் என்றார்.மிஷ்கின் பேசுகையில் நடிகர் விஷால் குறித்து தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் சேரன் ஆகியோர் விமர்சித்துள்ளனர். விஷால் 24 மணி நேரமும் உழைக்கக்கூடியவர்.

விஷால் மீது ஆதாரமற்ற புகார்களைக் கூறுவது தவறானது என்றார்

0 comments:

Post a Comment

Comments System

Copyright © latest news All Right Reserved
Designed by Harman Singh Hira @ Open w3. Published..Blogger Templates